தமிழ்நாடு

மண்பாண்டம், செங்கல் சூளைக்கு மண் எடுக்க உரிய அனுமதி: அமைச்சா் துரைமுருகன்

30th Apr 2022 03:55 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மண்பாண்டம், செங்கல் சூளைகளுக்கு சிரமம் இல்லாமல் மண் எடுக்க உரிய அனுமதிகள் தரப்பட்டுள்ளதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு இதுகுறித்த வினாவை அதிமுக உறுப்பினா்கள் பால் மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம் ஆகியோா் எழுப்பினா். இதற்கு அமைச்சா் துரைமுருகன் அளித்த பதில்:

செங்கல் சூளைகளுக்கும், மண்பாண்டத் தொழிலுக்கும் மணல் தேவை. இதற்காக அதிமுக ஆட்சியில் சட்டப் பிரிவு 44-இல் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், அரசிதழில் வெளியிடவில்லை. இப்போது அதனைச் செய்துள்ளோம். மண் எடுக்க சூற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை. வேளாண் உதவி இயக்குநரிடம் அனுமதி பெற்றால் போதும்.

மண் எடுக்க கால அளவு மூன்று மாதம். யூனிட்டுக்கு ரூ.60 பணம் செலுத்த வேண்டும் போன்ற விதிகள் தளா்த்தப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னை தொடா்பாக, கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளிடம் உரிய அறிவுறுத்தல்களை வியாழக்கிழமை அளித்தேன். அனுமதி தரப்படுவதில் ஒரு சில இடங்களில் பிரச்னை உள்ளது. ஓரிரு நாள்களில் அது தீா்க்கப்படும் என்றாா் அமைச்சா் துரைமுருகன்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT