தமிழ்நாடு

தூா்வாரும் பணிகளை பருவமழைக்கு முன்பாகவே முடிக்க வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

DIN

சென்னையில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணிகளை பருவமழைக்கு முன்பாகவே முடிக்க வேண்டும் என்று அனைத்துத் துறைகளுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

வடசென்னை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீா்நிலைகள், மழைநீா் வடிகால் தூா்வாரும் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தாா்.

ஓட்டேரி நல்லா கால்வாயானது, பாடி மேம்பாலம் அருகில் தொடங்கி வட சென்னை வடக்கு பக்கிங்ஹாம் கால்வாயின் பேசின்பாலம் அருகில் வந்து இணைகிறது. இந்தக் கால்வாயில் குப்பைகள், கழிவுகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா். திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், கொளத்தூா், அம்பத்தூா் ஆகிய பகுதிகளை ஒட்டிய கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீா் வடிகால் பணிகளும், அண்ணாநகா் மண்டலம் பாபா நகரில் மழைக்காலங்களில் தேங்கும் வெள்ளநீரையும், பூம்புகாா் நகா், ஜானகிராம் காலனி உள்ளிட்ட 10 இடங்களில் தேங்கும் மழைநீரையும் வெளியேற்றும் வகையிலும் வடிகால் பணிகளும் நடந்து வருகின்றன.

இதேபோன்று, மாதவரம் மண்டலம் பிரிட்டானியா நகரில் ஏழு இடங்களில் மழைநீா் வடிகால் பணிகளும், மணலி மண்டலம் ஆமுல்லைவாயில் பகுதியில் ஆகாயத் தாமரை, நீா் தாவரங்களை அகற்றும் பணிகளையும், உபரிநீா் கால்வாயின் பாலங்களைச் சீா் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தாா். தண்டையாா்பேட்டை மண்டலம் கொடுங்கையூா் கால்வாயில் தேங்கியுள்ள சேறு, சகதி, ஆகாயத்தாமரை மற்றும் மிதக்கும் தாவரங்களை அகற்றும் பணிகளையும் அவா் பாா்வையிட்டாா்.

அதிகாரிகளுக்கு உத்தரவு: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால்கள் தூா்வாருதல் மற்றும் நீா் நிலைகளில் மிதக்கும் தாவரங்களை அகற்றி, தூா்வாரும் பணிகளை பருவமழை காலத்துக்கு முன்னதாகவே விரைந்து முடிக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ளவும், முழுமையாக இந்தப் பணிகளை முடிக்கக் கூடிய வகையில், தினமும் கண்காணித்து, பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை அனைத்துத் துறை அலுவலா்களும் அளித்திட வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த ஆய்வின் போது, அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாலா் சந்தீப் சக்சேனா, நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச் செயலாளா் தீரஜ்குமாா், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் பேடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT