தமிழ்நாடு

விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த அனுமதி: மு.க.ஸ்டாலின்

28th Sep 2021 09:23 PM

ADVERTISEMENT

 

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள் கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  அக்டோபர் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

படிக்கதமிழகத்தில் 1-8 வகுப்புகளுக்கு நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு: முதல்வர்

ADVERTISEMENT

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா இரண்டாம் அலை முழுவதுமாக முடியாத நிலையில், பண்டிகை காலங்களில் கவனமுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கூட்டம் கூடும் இடங்களுக்கு செலதை மக்கள் தவிர்க்க வேண்டும். உரிய கட்டுப்பாடுகளைக் கடைபிடித்தால் மட்டுமே 3-வது அலையை தவிர்க்க இயலும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள் கிழமைதோறும் குறை தீர்க்கும் நாள் மற்றும் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil nadu Farmer coronavirus Corona
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT