தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: கமல்ஹாசன் நாளை முதல் பிரசாரம்

26th Sep 2021 09:39 PM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தேர்தலுக்கான தனது தேர்தல் பிரசாரத்தை நாளை காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து தொடங்கவிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 
வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் உள்பட விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகின்றன. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை முதல் பிரசாரத்தை தொடங்கவுள்ளார். 

இதையும் படிக்க- கரையைக் கடந்தது குலாப் புயல்

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், "உள்ளாட்சித் தேர்தலுக்கான எனது பரப்புரை ‘உள்ளாட்சி- உரிமைக்குரல்’ நாளை காஞ்சிபுரத்தில் ஒலிக்கும்" என்று பதிவிட்டுள்ளார். 

Tags : local body election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT