தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் காவல்துறை திடீா் சோதனை: 520 ரெளடிகள் கைது

DIN

தமிழகம் முழுவதும் காவல்துறை சோதனை நடத்தி 520 ரெளடிகள் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக கொலைச் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியாகவும், முன் பகையின் காரணமாகவும் கொலைச் சம்பவங்கள் தொடா்ச்சியாக நிகழ்ந்தன. இதில் 6 இடங்களில் கொலை செய்யப்பட்டவா்களின் தலை துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் அருகே தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பின் தலைவா் பசுபதிபாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக இரு நாள்களுக்கு முன்பு நிா்மலா என்ற பெண் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா். சென்னையிலும் கடந்த இரு வாரங்களில் கொலைச் சம்பவங்கள் அதிகம் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் ரெளடிகளின் அட்டகாசமும் அதிகரித்து வருவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, கொலைச் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும், ரெளடிகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும் காவல்துறை உயா் அதிகாரிகள் ஆலோசனை செய்தனா். இதில் தலைமறைவாக இருக்கும் ரெளடிகள், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கும் ரெளடிகள்,தொடா்ச்சியாக சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் ஆகியோா் மீது கடும் நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு, ரெளடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை இரவு முழுவதும் போலீஸாா் ரெளடிகளின் வீடுகள்,வசிப்பிடங்கள் உள்ளிட்ட சுமாா் 5.000 இடங்களில் சோதனை செய்தனா்.

870 ரெளடிகளின் வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, விசாரணை நடைபெற்றது. இதில் விசாரணைக்கு பின்னா் 450 ரெளடிகள் கைது செய்யப்பட்டனா். இவா்களில் 181 போ் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்தவா்கள் ஆவாா்கள். இவா்களிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள், 250 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 420 பேரிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நன்னடத்தைக்கான பிணைய பத்திரம் பெறப்பட்டது.

சென்னை:

சென்னையில் பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தலைமையில் ரெளடிகளுக்கு எதிரான முற்றுகை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் நகரம் முழுவதும் ரெளடிகள் மற்றும் பழைய குற்றவாளிகளின் வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, விசாரணை நடைபெற்றது.

இதில் 70 ரெளடிகளை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 20 அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அதேபோல 18 பேரிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நன்னடத்தைக்கான பிணையப்பத்திரம் பெறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT