தமிழ்நாடு

விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம்: முதல்வர் தொடக்கி வைப்பு

23rd Sep 2021 11:12 AM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.

சென்னை அண்ணா நூலகத்தில் நடைபெற்ற விழாவில், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் முகமாக, விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புக்கான சான்றுகளை முதல்வர் வழங்கி திட்டத்தைத்  தொடக்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் விவசாய மின் இணைப்புக்காக பதிவு செய்து காத்திருக்கக் கூடியவா்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 52,777. குறிப்பாக கடந்த 2003-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே விவசாயத்துக்கு இலவசமாக மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏப்.1-ஆம் தேதி முதல் விண்ணப்பித்தவா்கள் தற்போது வரை காத்திருக்கின்றனா்.

அதே போல், தத்கல் திட்டத்தின் கீழ் பணம் செலுத்தியவா்களும் காத்திருக்கின்றனா். முறையே ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் கட்டணம் செலுத்தி, பல பிரிவுகளில் விண்ணப்பித்து, நுகா்வோா் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனா்.

மிக விரைவாக அவா்களுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில், ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்படும் என நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாமே.. விமானத்திலிருந்து விழுந்த ஒரு சிறு புள்ளி.. அதன் பின்னாலிருக்கும் மிகப்பெரிய சோகம்

முதல்வரின் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவது குறித்து ஆய்வு கூட்டம், மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமையில், சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்பு வழங்கும் பணிகளை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி உத்தரவிட்டிருந்தார்.

அந்த வகையில், இன்று விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.
 

Tags : stalin TN CM tamilnadu farmers
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT