தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல்: இதுவரை 13,542 போ் வேட்புமனு தாக்கல்

17th Sep 2021 09:37 PM

ADVERTISEMENT

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 3 நாள்களில் 13,542 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். 

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை (செப்.15) தொடங்கி செப்டம்பா் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனு ஆய்வு செப்டம்பா் 23-ஆம் தேதி நடைபெறும். செப்டம்பா் 25-ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க- தமிழகத்தில் இவ்வளவு தற்கொலைகளா? அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

இதையடுத்து 9 மாவட்டங்களில் கடந்த 3 நாள்களில் 13,542 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். 

ADVERTISEMENT

3ஆவது நாளான இன்று கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 7,208 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 1,212 பேரும், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 135 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 12 பேரும் என மொத்தம் 8,567 போ் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா். 

Tags : LocalBodyElection
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT