தமிழ்நாடு

நீட் தேர்வுக்காக மாணவ, மாணவிகள் உயிரை துறப்பது சரியான முடிவல்ல: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

12th Sep 2021 01:03 PM

ADVERTISEMENT


நீட் தேர்வுக்காக மாணவ, மாணவிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வது சரியான முடிவாக இருக்காது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கூழையூரை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமாரின்  இரண்டாவது மகன் தனுஷ்(19) மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019-ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்தார். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தார்.

மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த அவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இரண்டு முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது முறையாக மேச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நீட் தேர்வு எழுத தயாராகி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

ADVERTISEMENT

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவரின் உயிரிழப்பு கவலையும், வேதனையும் அளிப்பதாக உள்ளது. நீட் தேர்வுக்காக மாணவ, மாணவிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வது சரியான முடிவாக இருக்காது. 

நீட் தேர்வுக்கு குறுகிய காலமே இருந்தது என்பதால் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை.

தமிழக அரசு நீட் தேர்வுக்கான சிறப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் நாளை திங்கள்கிழமை நிறைவேற்றப்பட இருக்கிறது.  தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது என்று கூறினார் மா.சுப்பிரமணியன். 

Tags : not the right decision Sacrificing students Minister Ma. Subramaniam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT