தமிழ்நாடு

பத்திரப்பதிவில் முறைகேடு செய்தால் சிறைத் தண்டனை வழங்க சட்டம் கொண்டு வரப்படும்: அமைச்சர் மூர்த்தி

11th Sep 2021 11:53 AM

ADVERTISEMENT


பத்திரப்பதிவுத் துறையில் முறைகேடு செய்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க சட்டம் கொண்டு வரப்படும் என்று மதுரையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி கூறியதாவது, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய சொத்துகள் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டு, பத்திரப்பதிவுத் துறையில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. 2016 முதல் 2021 வரை பத்திரப்பதிவு துறையில் வெளிப்படையாகவே முறைகேடுகள் நடந்துள்ளன.

கடந்த கால ஆட்சியில் பத்திரப் பதிவுத் துறையில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க  உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.

பத்திரப்பதிவில் முறைகேடு செய்தால் சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும். முறைகேட்டில் தொடர்புடைய பிற துறையை சேர்ந்தவர்களுக்கும் 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க சட்டம் வழிவகை செய்யும். வரும் 6 மாதத்துக்குள் பத்திரப்பதிவு நடைமுறைகள் எளிமையாக்கப்படும் என்று கூறினார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT