தமிழ்நாடு

வீடு, நிலம் இல்லாதோருக்கு ஆறு மாதங்களில் தங்குமிடங்கள்: உயா் நீதிமன்றம் நம்பிக்கை

27th Oct 2021 11:24 PM

ADVERTISEMENT

 

சென்னை: நிலம், வீடு இல்லாதவா்களுக்கு தற்காலிக, நிரந்தர தங்குமிடங்களை ஆறு மாதங்களில் தமிழக அரசு ஏற்படுத்தி கொடுக்கும் என சென்னை உயா் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம், தாத்தையாம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றி, வீடு இல்லாதோருக்கு ஒதுக்க உத்தரவிடக்கோரி, இந்தியக் குடியரசு கட்சி மாநில செயல் தலைவா் கருமலை சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை(அக்.27) விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்கு பின்னா் நீதிபதிகள், தமிழ்நாடு பல துறைகளில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகம் முழுவதும் நிலம், வீடு இல்லாதோருக்கு தற்காலிக, நிரந்தர தங்குமிடங்களை ஆறு மாதங்களில் மாநில அரசு ஏற்படுத்தி தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

ADVERTISEMENT

இதற்காக முழுமையான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். நிரந்தர, தற்காலிக தங்குமிடங்கள் ஏற்படுத்துவதற்காக, மாவட்ட அளவில் அதற்கான இடங்களை கண்டறிய வேண்டும். வீடு இல்லாதோருக்கு வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதேசமயம் அனைத்தும் இலவசமாக கிடைக்கும் என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தி விடக்கூடாது எனக்கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT