தமிழ்நாடு

6-ம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம்: 22.33 லட்சம் பேருக்கு தடுப்பூசி

23rd Oct 2021 09:06 PM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் நடைபெற்ற 6ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 22.33 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், முதல்வரின் உத்தரவுப் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 50,000 மையங்களில் மெகா கரோனா தடுப்பூசி பணிகள் நடைபெற்றது. 
இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையும் அளிக்க திட்டமிடப்பட்டது. இதுவரை நடைபெற்ற ஐந்து மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் பற்றிய விவரம் பின்வருமாறு:

இன்று (23-10-2021) நடைபெற்ற ஆறாவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 22,33,219 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இதில் முதல் தவணையாக 8,67,573 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 13,65,646 பயனாளிகளுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் நடைபெற்ற கரோனா தடுப்புசி முகாம்களை நேரடி கள ஆய்வு செய்தார்.

இதையும் படிக்க- திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பு: நவ.1 முதல் எவற்றுக்கெல்லாம் அனுமதி ?

ADVERTISEMENT

மேலும், மாநிலத்தில் இன்று (23.10.2021) நடைபெற்ற ஆறாவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு நாளை (24.10.2021) கரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது என தெரிவித்துள்ளார்.

Tags : Vaccination
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT