தமிழ்நாடு

தமிழகத்தில் மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் இருக்கிறதா? ராதாகிருஷ்ணன் பதில்

23rd Oct 2021 09:12 AM

ADVERTISEMENT

பல்வேறு நாடுகளில் கரோனா மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன. இதனிடையே, தமிழகத்திலும் மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என பலர் கேள்வி வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "தமிழகத்தில் நடைபெறும் 6ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் மூலம் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 1.40 கோடி முதியவர்களில் 47 லட்சம் பேர் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். 

2-வது தவணை தடுப்பூசியை 22 லட்சம் முதியவர்கள் மட்டுமே போட்டுள்ளனர்.  இறப்பு விகிதம் அதிகமுள்ளோர் கரோனா தடுப்பூசி போடாமல் இருப்பது சரியல்ல.

ADVERTISEMENT

தமிழகத்தில் இதுவரை கரோனா 3-வது அலைக்கான அறிகுறிகள் இல்லை.  அறிகுறிகள் இல்லை என்றாலும் 3-வது அலை வராது என்று கூற இயலாது.  வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் சிலவற்றில் கரோனா 3-வது அலை ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. மழை காலங்களில் பரவும் நோய்களில் இருந்தும் மக்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்" என்றார்.

Tags : Tamil nadu third wave
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT