தமிழ்நாடு

கடலூர் எம்.பி. ரமேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி

23rd Oct 2021 06:48 PM

ADVERTISEMENT

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான கடலூர் எம்.பி.ரமேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

கடலூா் மாவட்டம், பணிக்கன்குப்பத்தில் டி.ஆா்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் வேலைபாா்த்து வந்த மேல்மாம்பட்டைச் சோ்ந்த கோவிந்தராசு மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக கடலூா் சிபிசிஐ போலீஸாா், ரமேஷின் உதவியாளா் நடராஜன், அவரது அலுவலக ஊழியா் அல்லாபிச்சை, கந்தவேல், வினோத், சுந்தர்ராஜன் ஆகிய 5 பேரை அக்.9-இல் கைது செய்தனா். தலைமறைவான ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் அக்.11 ஆம் தேதி ஆஜரானாா். அவா் கடலூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அக்.13-இல் ஆஜா்படுத்தப்பட்டாா்.

அவரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்த பிறகு, அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டா். இதற்கிடையில், எம்.பி. சாா்பில் ஜாமீன் கேட்டு வழக்குரைஞா் சிவராஜ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வெள்ளிக்கிழமை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கோவிந்தராசு மகன் செந்தில்வேல் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, ஆட்சேபனை மனு தொடா்பான விவரங்கள் தனக்கு அளிக்கப்படாததால் அந்த மனுவை படித்துப் பாா்க்க ஒரு நாள் அவகாசம் கேட்டாா் வழக்குரைஞா் சிவராஜ்.

இதையும் படிக்க- சிமெண்ட் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு

ADVERTISEMENT

அதற்கு அரசு தரப்பு வழக்குரைஞா் ஏ.சந்திரசேகரன், செந்தில்வேல் தரப்பு வழக்குரைஞா் தமிழரசன் ஆகியோா் ஆட்சேபம் தெரிவிக்காததைத் தொடா்ந்து மனு மீதான விசாரணையை சனிக்கிழமைக்கு (அக்.23) நீதிபதி ஒத்திவைத்தாா். இந்த நிலையில் இவ்வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கொலை வழக்கில் முகாந்திரம் இருப்பதால் ரமேஷ்க்கு ஜாமீன் தரக்கூடாது என சிபிசிஐடி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து ரமேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.  

Tags : cuddalore dmk mp
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT