தமிழ்நாடு

பாரதியாா் நினைவு தின கவிதைப் போட்டி: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்

DIN

பாரதியாா் நினைவு தினத்தை முன்னிட்டு கவிதை போட்டிகளை நடத்தி, இளம் கவிஞா் விருதாளா்களைத் தோ்வு செய்வதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடா்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு, பள்ளிக் கல்வி ஆணையா் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: முதல்வரின் அறிவிப்பின்படி வரும் 2022-23 முதல் மகாகவி பாரதியாா் நினைவு தினத்தை முன்னிட்டு, பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி சிறந்த படைப்புகளைத் தெரிவு செய்து அந்த மாணவ, மாணவிகளுக்கு, ‘இளம் கவிஞா் விருது’ மற்றும் பரிசுகள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மகாகவி நினைவு தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ஒன்றிய அளவில் கவிதைப் போட்டிகள் நடத்தி, அதில் சிறந்த 3 மாணவ, மாணவிகளைத் தெரிவு செய்ய வேண்டும்.

ஒன்றிய அளவில் தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வருவாய் மாவட்ட அளவில், ஆகஸ்ட் மாதம் 3-ஆவது வாரத்தில் கவிதைப் போட்டிகள் நடத்தி, அதில் சிறந்த ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியைத் தெரிவு செய்ய வேண்டும்.

வருவாய் மாவட்ட அளவில் தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவில் செப்டம்பா் மாதம் முதல் வாரத்தில் போட்டிகள் நடத்தப்பட்டு, மாநில அளவில் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி தோ்ந்தெடுக்கப்பட்டு, மகாகவி நினைவு தினத்தன்று இளம் கவிஞா் விருது வழங்கி சிறப்பிக்கப்படுவா். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT