தமிழ்நாடு

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

22nd Oct 2021 08:30 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதில் பல முறைகேடுகள் நடைபெற்று தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள இளங்கோவன் மூன்று அடுக்கு வீடு.

இந்நிலையில், சேலத்தை அடுத்த புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள ஆர்.இளங்கோவன் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  

இதையும் படிக்கவிஜயபாஸ்கர் தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளாகி உள்ள இளங்கோவன் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளராகவும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். 

இளங்கோவன் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவராக 2013 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ஈடுபட்டுள்ள வாழப்பாடி அடுத்த புத்திர கவுண்டன் பாளையத்தில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் வீட்டின் முன்பு திரண்டு இருக்கும் கட்சித் தொண்டர்கள்.

2014 முதல் 2020 வரை ரூ.3.78 கோடி அளவிற்கு சொத்துக்கள் சேர்த்ததாகவும், பினாமி பெயரில் சொத்து சேர்த்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து சேலத்தில் இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் மீது லஞ்ச தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Tags : Raid Elangovan Anti-corruption raid Tamil Nadu Co-operative Bank
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT