தமிழ்நாடு

'வாரிசு அரசியல் பேச்சுக்கே இடமில்லை': வைகோ

20th Oct 2021 07:08 PM

ADVERTISEMENT

 

வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

மதிமுக தலைமை செயலாளராக வைகோவின் மகன் துரை வையாபுரி நியமிக்கப்பட்டுள்ளதாக வைகோ அறிவித்தார். 

இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது, துரை வையாபுரி நியமனத்தில் வாரிசு அரசியல் இல்லை. வாரிசு அரசியல் என்பது ஒருவரை திணிப்பது.

ADVERTISEMENT

படிக்கமதிமுக தலைமைச் செயலராக வைகோ மகன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தொண்டர்கள் விருப்பத்தின் பெயரிலேயே அரசியலுக்கு வந்துள்ளார். பொதுவாழ்வுக்குத் தேவையான அனைத்து தகுதிகளும் துரை வையாபுரியிடம் உள்ளது.

இரண்டு மூன்று ஆண்டுகளாக துரை வையாபுரியை பொதுவாழ்வில் ஈடுபட வேண்டாம் என்று தடுத்து வந்தேன். ஆனால் முழுவதும் தடுக்க முடியவில்லை. 

தொண்டர்கள் விருப்பப்படி துரை வையாபுரி பொதுவாழ்வில் தன்னை இணைத்துள்ளார். பொதுவாழ்வுக்குத் தேவையான அனைத்து தகுதிகளும் துரை வையாபுரியிடம் உள்ளது என்று கூறினார். 

Tags : மதிமுக வைகோ Vaiko
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT