தமிழ்நாடு

மீனவர் விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

20th Oct 2021 10:11 PM

ADVERTISEMENT


இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 18-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரை இலங்கை கடற்படை துரத்தினர்.

அதில் இரு மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், ஒருவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட மீனவர்களுக்கு மறு வாழ்வு அளித்திட வேண்டும். காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்ற துயர சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால், அதனைத் தடுக்கும் வகையில் நிரந்தர முடிவு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 

ADVERTISEMENT

Tags : Union Minister MK Stalin Fisher man முதல்வர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT