தமிழ்நாடு

பாளையம்பட்டி சுப்பாஞானியார் கோவிலில் அன்னாபிஷேகம்

20th Oct 2021 04:54 PM

ADVERTISEMENT

 

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம்  அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் சத்குரு  ஸ்ரீசுப்பாஞானியார் அடங்கிய (ஜீவ சமாதி) திருக்கோவிலில் புதன்கிழமை ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டுடன் பாரம்பரிய முறையில்  அன்னாபிஷேகம் நடைபெற்றது.

பாளையம்பட்டியில் சத்குரு ஸ்ரீசுப்பாஞானியார் அடங்கிய (ஜீவசமாதி) திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை ஆயிரவைசிய காசுக்காரச்செட்டியார் வம்சத்தினர் பரம்பரை பரம்பரையாக பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கோவிலில் ஐப்பசி பெளர்மணியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதன்படி புதன்கிழமை காலை கருவறையில் உள்ள அருள்மிகு நமச்சிவாயருக்கு பால், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதுடன், தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து பாரம்பரிய முறைப்படி ஐப்பசி பெளர்ணமி நன்னாளை முன்னிட்டு அங்குள்ள நமச்சிவாயருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது.இந்த அன்னாபிஷேகத்தால் உலக நன்மையும்,தட்டுப்பாடின்றி உணவு உள்ளிட்ட சகல செல்வங்களும் கிடைக்குமென்பது நம்பிக்கை.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் சுமார் 600க்கு மேற்பட்டோர் உரிய சமூக இடைவெளியுடன் நேரில் கலந்து கொண்டு வழிபட்டனர்.
 

Tags : Annabhishekam sivan temple
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT