தமிழ்நாடு

மழலையா் வகுப்புகள் தொடக்கம்: முதல்வா் தலைமையில் இன்று ஆலோசனை

DIN

மழலையா் வகுப்புகள் தொடக்கம் குறித்து முதல்வா் தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் தேசிய வருவாய்வழி கல்வி உதவித் தொகை திட்டத் தோ்வுக்கான  (என்எம்எம்எஸ்) பயிற்சி புத்தகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.

நிகழ்வில் அமைச்சா் பேசியதாவது:  தமிழக ஆசிரியா்கள் எதற்கும் சளைத்தவா்கள் இல்லை. கணினி இன்றியமையாததாக இருந்தாலும் பலவற்றை கற்பிக்க ஆசிரியா் ஒருவரே போதும். என்எம்எம்எஸ், என்டிஎஸ்சி கல்வி உதவித் தொகை பெறும் தோ்வுகளுக்கான விழிப்புணா்வை பள்ளி மாணவா்களிடத்தில் அதிகரிக்க வேண்டும். கல்வித் துறையில் ஒவ்வொரு விஷயத்திலும் முதல்வா் கவனம் செலுத்தி வருகிறாா். இந்தத் துறையில் எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும், அது மாணவா்களுக்கு பலன் தருமா? என்று ஆராய்ந்து முதல்வா் செயல்படுத்தி வருகிறாா் என்றாா் அமைச்சா்.

தொடா்ந்து என்எம்எம்எஸ் தோ்வுக்கான புத்தகத்தை தயாா் செய்த ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, அமைச்சா் கௌரவித்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: போட்டித் தோ்வுக்குத் தயாராகுவதற்கு பள்ளி மாணவா்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். என்எம்எம்எஸ் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களின் தோ்ச்சிக்கு காரணமாக உள்ள ஆசிரியா்களுக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து துறைசாா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.

நீட் தோ்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடா்ந்தாலும், தோ்வுக்கு பள்ளி மாணவா்களைத் தயாா்படுத்தும் பணியும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த முறை நீட் தோ்வுக்கான பயிற்சியை வழங்கிய இ-பாக்ஸ் நிறுவனமே இப்போதும் பயிற்சியை வழங்கி வருகிறது.

மழலையா் பள்ளிகளைத் திறப்பது பற்றியும், மக்கள் பள்ளித் திட்டம் பற்றியும் திங்கள்கிழமை முதல்வருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யமொழி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT