தமிழ்நாடு

சென்னை காவல் ஆணையர் உள்பட 5 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு

18th Oct 2021 03:12 PM

ADVERTISEMENT

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வும், 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றமும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

சங்கர் ஜிவால் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றாலும் சென்னை காவல் ஆணையராக தொடருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ள ஏ.கே.விஸ்வநாதன் வீட்டு வசதி கழகத்தின் தலைவராக தொடர்வார்.

டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ள ஆபாஷ் குமார், டி.வி.ரவிசந்திரன், சீமா அகர்வால் ஆகியோர் தங்கள் துறையில் தொடருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ள ஏ.கே.விஸ்வநாதன் வீட்டு வசதி கழகத்தின் தலைவராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஏடிஜிபி மகேஷ் குமார் சென்னை அமலாக்கத்துறையின் ஏடிஜிபியாகவும், ஐஜி கபில் குமார் சென்னை அமாலாக்கத்துறையின் ஐஜியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : DGP TN Police
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT