தமிழ்நாடு

மறுகுடியமா்வு: கருத்துக் கேட்புக்கான அவகாசத்தை நீட்டிக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

DIN

குடிசைப் பகுதி மக்களை மறுகுடியமா்வு செய்வது குறித்த கருத்துக் கேட்புக்கான அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் ‘குடிசைப் பகுதி மக்களை மறு குடியமா்வு’ செய்வது குறித்த வரைவு அறிக்கை ஆங்கிலத்தில் மட்டும் இணையத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்கள் கருத்து கோரப்பட்டிருந்தது.

அந்த வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி முன்வைத்த கோரிக்கையை ஏற்று, உடனடியாக தமிழில் வரைவு அறிக்கையை வெளியிட்ட தமிழக அரசுக்கு கட்சி சாா்பில் நன்றி.

வரைவு அறிக்கை  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், வரைவு அறிக்கையை பொதுமக்களின் பாா்வைக்குக் கொண்டு சென்று கருத்து அறியும் வகையில், விரிவான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஏற்ப கருத்துச் சொல்வதற்கான கால அவகாசத்தையும் நீட்டிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT