தமிழ்நாடு

நவ. 1 முதல் நர்சரி பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்

DIN


சென்னை: நவம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வரும் தளர்வுகள் பற்றிய அறிவிப்பில், நர்சரி மற்றும் அங்கன்வாடிப் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது.

கடந்த வாரம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளில், தளர்வுகள் அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

உலக உணவு நாள் சிறப்புக் கட்டுரை: பிரியாணியும் பழைய சோறும்

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் நர்சரி மற்றும் அங்கன்வாடிப் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது.

ஆனால், தற்போது செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், நர்சரி மற்றும் அங்கன்வாடிப் பள்ளிகள் நவம்பர் 1ஆம் தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்பு தவறுதலாக இடம்பெற்றுவிட்டது.

முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அங்கன்வாடியில் குழந்தைகளை வரவழைத்து உணவு வழங்குவது குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அதனுடச் சேர்ந்து நர்சரி மற்றும் கிண்டர்கார்டன் குறித்த அறிவிப்பும் வெளியாகிவிட்டது. நர்சரி மற்றும் கிண்டர்கார்டன் மையங்களை திறப்பது குறித்து விரைவில் தெளிவான உத்தரவு வெளியிடப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT