தமிழ்நாடு

சீர்காழி அருகே நெல் சேமிப்புக் கிடங்கில் குளம் போல் தேங்கிய மழைநீர்: 15,000 மூட்டைகள் சேதம்

30th Nov 2021 03:58 PM

ADVERTISEMENT

சீர்காழி: சீர்காழி அருகே நெல் சேமிப்புக் கிடங்கில் குளம் போல் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிடங்கில் இருந்த 15,000 மூட்டைகள் சேதமடைந்தன.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் சாலையில்  டி. மணல்மேடு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் சார்பில் நெல் சேமிப்புக் கிடங்கு உள்ளது. 

இந்த கிடங்கில் சீர்காழி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை இந்த இடத்தில் கொண்டுவந்து சேமித்து வைத்து பின்னர் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சீர்காழி பகுதியில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட குறுவை நெல் மூட்டைகள் மேற்கண்ட திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் ஒரு லாட்டிற்கு 3000 மூட்டை வீதம், 23 லாட்டில் 4,752 டன் அதாவது 1.90 லட்சம்  நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையில் சுமார் 15,000 நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து பாதிக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது .மேலும் சேமிப்புக் கிடங்கு முழுவதும் 3 அடி உயரத்திற்கு மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் அப்புறப்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்ததால் நேற்று மயிலாடுதுறை மாவட்ட துணை மேலாளர்( தரக்கட்டுப்பாடு) முத்தையன் தலைமையில் நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியோடு சேமிப்பு கிடங்கு வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை பம்புசெட்டு மூலமும் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இதுகுறித்து சம்பந்தப்பட்டஅதிகாரி கூறுகையில், சேமிப்புக் கிடங்கில் சூழ்ந்துள்ள மழை நீரினை உடனடியாக  அகற்றப்பட்டு இங்குள்ள அனைத்து நெல் மூட்டைகளையும் இரண்டு நாட்களுக்குள் பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
 

Tags : சீர்காழி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT