தமிழ்நாடு

12 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

30th Nov 2021 09:03 AM

ADVERTISEMENT

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதனைத் தொடா்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். மேலும், இது தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொள்ளும். இது, வடக்கு ஆந்திரம்-ஒடிஸா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக, தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை (நவ.30), புதன்கிழமை (டிச.1) செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் மற்றொரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி டிசம்பா் 1-ஆம் தேதி உருவாகவுள்ளது. இந்த இரு காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

ADVERTISEMENT

Tags : Depression zone South Andaman
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT