தமிழ்நாடு

ஓசூரில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் கைது

30th Nov 2021 10:11 PM

ADVERTISEMENT

 

ஓசூரில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஷோபனா வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில், அவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஓசூர் நேரு நகரில் வசித்து வருபவர் சி.என்.ஷோபனா. இவர் ஒரு வேலூர் மண்டல பொதுப்பணித் துறை செயற்பொறியாளராக (தொழில்நுட்ப கல்வி, வேலூர் மண்டல செயற்பொறியாளர்) பணியாற்றி வருகிறார்.

இவரிடம் ரூ. 5 லட்சம் லஞ்சம் கொடுக்கும் போது கையும் களவுமாக 1 ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒதூரில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த 3-ஆம் தேதி சோதனை செய்தபோது அவரது வீட்டிலிருந்து ரூபாய் 2 கோடியே 27 லட்சம் பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT

மேலும் ஒரு லாக்கர் சாவி 7 சொத்து ஆவணங்கள் 38 சவரன் நகை ஒரு 1.3 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்தனர். செயற்பொறியாளர் ஷோபனா தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்கள் கல்லூரியில் கட்டடங்கள் அனுமதி அளிப்பது தொடர்பாக இவர் லஞ்சம் பெற்றுள்ளார்.   இவர் மீது ஊழல் தடுப்பு பிரிவு  ஆய்வாளர் ரஜினி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமையும் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் அவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

Tags : காவல் துறை ஓசூர் லஞ்ச ஒழிப்பு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT