தமிழ்நாடு

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, மிக கனமழைக்கு வாய்ப்பு

28th Nov 2021 02:52 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை(நவ.28) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நாளை திங்கள்கிழமை(நவ.29) புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ஒரு நாள் தாமதமாக நாளை மறுநாள் செவ்வாய்கிழமை(நவ.30) ஆம் தேதி உருவாகிறது. 

இதையும் படிக்க |  காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்!

இதையடுத்து தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மிக கனமழை வாய்ப்புள்ளதாகவும், அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க |  7 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் செயல்படும் அரசு தமிழ்ப்பள்ளி: தமிழர்கள் அதிர்ச்சி

மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் நாளை திங்கள்கிழமை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இதையடுத்து மீனவர்கள் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் மேற்கு, மத்திய மேற்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : heavy rain very heavy rain மிக கனமழை வானிலை ஆய்வு மையம் கனமழை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT