தமிழ்நாடு

தொடர் கனமழை: தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

DIN


சென்னை: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தமிழகத்தில் 23 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்து வருகிறது. தற்போது கனமழை தொடரும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று சனிக்கிழமை(நவ.17) விடுமுறை அறிவித்து சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

இதேபோன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று சனிக்கிழமையும் (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

பல்வேறு மாவட்டங்களில் தொடா் மழை காரணமாக கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மழையளவு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய, விடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. ஆவடியில் 199 மி.மீட்டர், 199 மி.மீ, திருவள்ளூர் 126 மி.மீ, அதிகமாகவும், பொன்னேரி, காஞ்சிபுரம், செம்பரம்பாக்கத்தில் 12 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆர்.கே.பேட்டை - 6 மி.மீ என மழை அளவு பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT