தமிழ்நாடு

சென்னையில் கனமழை: 2 சுரங்கப்பாதைகள் மூடல்; போக்குவரத்துக்கு தடை

27th Nov 2021 10:15 AM

ADVERTISEMENTசென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 2 சுங்கரப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கே.கே.நகா் ராஜமன்னாா் சாலையில் தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் இரண்டாவது அவென்யூவை நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளன. 

இதையும் படிக்க | செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 3000 கனஅடியாக அதிகரிப்பு

ADVERTISEMENT

இதேபோன்று வளசரவாக்கம் மெகா மாா்ட் சாலையில் தண்ணீா் தேங்கியதால், அங்கு போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, வாகனங்கள் ஆற்காடு சாலை, கேசவா்திணி சாலை ஆகியவற்றில் திருப்பி விடப்பட்டுள்ளன. 

மேலும் தியாகராயநகா் வாணி மஹால் முதல் பென்ஸ் பாா்க் வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

இதையும் படிக்க | முகக்கவசம் அணியாமல் அலட்சியம் காட்டும் சென்னை மக்கள்

கே.கே. நகா் அண்ணா பிரதான சாலையில் மழைநீா் வடிகால் வாரிய சீரமைப்பு பணி நடைபெறுவதால், அந்தப் பகுதியில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

Tags : Heavy rains Chennai 2 tunnels closed Prohibition of transport
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT