தமிழ்நாடு

'யாஸ்' புயல்: உதவிக்காக கட்டுப்பாட்டு அறையிலேயே இருந்த மம்தா

26th May 2021 04:17 PM

ADVERTISEMENT

யாஸ் புயல் கரையைக் கடக்கும் போது கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே முதல்வர் மம்தா பானர்ஜி அதிகாரிகளுடன் இணைந்து பணிபுரிந்தார்.

வங்கக் கடலில் உருவான 'யாஸ்' புயல் அதிதீவிர புயலாக மாறி ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடக்கும்போது ஒடிசாவின் பாலசோர் அருகே வங்கக்கடலில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

மேற்கு வங்கத்தில் ’யாஸ்’ புயல் பாதிப்பு குறித்த உதவிகளுக்காக 24 மணிநேர கட்டுப்பாடு மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

ADVERTISEMENT

மாநில மற்றும் தேசியே பேரிடர் மீட்புப் படையினர் மூலம் கடலோரப் பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 

இதனிடையே மேற்கு வங்கத்தின் ஹவுரா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி வருகை புரிந்தார்.

புயல் கரையைக் கடக்கும் நேரங்களில் வரும் அவசர அழைப்புகளுக்கு பதிலளித்து தேவையான உதவிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை அவர் அதிகாரிகளுடன் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே மேற்கொண்டார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT