தமிழ்நாடு

திருச்சி மாவட்ட ஆட்சியராக சு. சிவராசு பொறுப்பேற்பு

19th May 2021 03:51 PM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட ஆட்சியராக சு. சிவராசு புதன்கிழமை காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஏற்கனவே திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த அவர் தேர்தல் சமயத்தின்போது அரசியல் கட்சி பிரமுகர்கள் காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா செய்த சம்பவத்தின் எதிரொலியாக தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்டார்.

அதற்குப் பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினி நியமிக்கப்பட்டார். தேர்தல் முடிந்து திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னரும் திவ்யதர்ஷினி ஆட்சியராக தொடர்ந்து வந்தார். இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியராக மீண்டும் சிவராசு நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றுள்ளார். அவர் திருச்சி மாவட்டத்தின் 144 ஆவது ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள சிவராசு, திருச்சி மாவட்டத்தில் கரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தினசரி சுமார் 6 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த இரு நாட்களாக ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற நிலை கிடையாது. படுக்கைகள் இல்லை எனக் கூறி மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகளை வெளியேற்றுவதும் தனியார் மருத்துவமனைகள் இறக்கும் தருவாயில் உள்ள நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு மாற்றுவதும், கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பது குறித்தும் புகார்கள் வந்துள்ளன. இவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கரோனாவை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT