தமிழ்நாடு

'கி.ரா. மறைவு உலகிற்கே பேரிழப்பு' - தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல்

18th May 2021 11:14 AM

ADVERTISEMENT

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் கி.ரா. என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன்(98) வயது மூப்பின் காரணமாக, புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை இரவு (மே 17) காலமானார். 

அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

படிக்க: எழுத்தாளர் கி.ரா. காலமானார் 

முதல்வர் மு.க.ஸ்டாலின், 'கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்' என்று பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

படிக்க: சொந்த ஊரில் கி.ரா. இறுதிச் சடங்கு

எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிசாமி,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

திமுக மக்களவை எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார். 

அதேபோல நடிகர் சிவகுமார், 'ஞானத் தந்தையை இழந்துவிட்டேன்' என்று கி.ரா. மறைவு குறித்து பதிவிட்டுள்ளார். 

விசிக தலைவரும், மக்களவை எம்.பி.யுமான தொல். திருமாவளவன் இரங்கல் செய்தி:

அதேபோல, அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கி.ரா.வுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 'கரிசல் குயில் பறந்தது, இடைசெவலில் மலர்ந்த ஒப்புவமை சொல்ல முடியாத புதுமையாளர்' என்று கூறியுள்ளார். 

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

அவரைத் தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி, 

 

புதுச்சேரி முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமியும் கி.ரா. மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

 

Tags : death
ADVERTISEMENT
ADVERTISEMENT