தமிழ்நாடு

கரோனா தடுப்புப் பணி: அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் குழு அமைப்பு

DIN

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டம் 13.05.2021 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாக பின்வரும் தீர்மானம் (தீர்மானம் எண்.4) நிறைவேற்றப்பட்டது.

“நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது”

மேலே தெரிவிக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அனைத்து சட்டமன்ற கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் முதல்வர் தலைமையில் பின்வரும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது.

ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்
1. மருத்துவர் நா.எழிலன்(திமுக)
2. மருத்துவர் சி. விஜய பாஸ்கர்(அதிமுக)
3. ஏ.எம். முனிரத்தினம்(காங்கிரஸ்)
4. ஜி.கே. மணி(பாமக)
5. நயினார் நாகேந்திரன்(பாஜக)
6. மருத்துவர் தி. சதன் திருமலைக்குமார்(மதிமுக)
7. எஸ்.எஸ். பாலாஜி(விடுதலை சிறுத்தைகள் கட்சி)
8. வி.பி. நாகை மாலி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
9 தி. ராமசந்திரன்(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
10. முனைவர் ஜவாஉறிருல்லா(மனித நேய மக்கள் கட்சி)
11. ரா.ஈஸ்வரன்(கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி) 
12. தி.வேல்முருகன்(தமிழக வாழ்வுரிமை கட்சி)
13. பூவை ஜெகன் மூர்த்தி(புரட்சி பாரதம்)

மேற்படி ஆலோசனை குழுவானது அவசர அவசியம் கருதி நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும். இக்குழுவிற்கு பொதுத்துறை செயலாளர் உறுப்பினர் செயலராக செயல்படுவார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT