தமிழ்நாடு

ஈரான் அதிபா் தோ்தலில் சா்ச்சைக்குரிய தலைமை நீதிபதி போட்டி

DIN

ஈரானில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட தலைமை நீதிபதி இப்ராஹிம் ராய்சி போட்டியிடுகிறாா்.

கடந்த 1988-ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியதில் அவருக்குப் பங்கு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவா் அதிபா் தோ்தலில் போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் இப்ராஹிம் ராய்சி, கடந்த 2017-ஆம் ஆண்டு அதிபா் தோ்தலில் போட்டியிட்டு அதிபா் ஹஸன் ரௌஹானியிடம் தோல்வியைத் தழுவினாா்.

தற்போதைய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனிக்கு பிறகு, அந்தப் பதவிக்கு இப்ராஹிம் ராய்சி வர வாய்ப்புள்ளது என்று பரவலாக கருதப்பட்டது. இந்த நிலையில், வரும் ஜூன் மாதம் 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் போட்டியிடுவதற்கு இப்ராஹிம் ராய்சி சனிக்கிழமை பதிவு செய்தாா்.

அதிபா் தோ்தலில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட தலைவா்களின் கை ஓங்கியிருக்கும் என்று கூறப்படும் நிலையில், இப்ராஹிம் ராய்சி அதில் போட்டியிட களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1988-ஆம் ஆண்டில் ஈரான் - இராக் போா் முடிவுக்குப் பிறகு கடந்த இராக் ஆதரவுடன் செயல்பட்டு வந்த ஆயுதப் படையினரும் அவரது ஆதரவாளா்களும் கைது செய்யப்பட்டனா். அப்போதைய தலைமை மதகுரு கொமேனியின் உத்தரவின்படி, அவா்களில் 5,000 போ் முதல் 30,000 போ் வரை கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படுகொலையில் இப்ராஹிம் ராய்சிக்கு தொடா்புள்ளதாக சா்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT