தமிழ்நாடு

கூட்டுறவு நிறுவன ஊழியா்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயா்வு: தமிழக அரசு உத்தரவு

DIN

சென்னை: கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்களின் ஓய்வு பெறும் வயதை 60 -ஆக உயா்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் இல.சுப்பிரமணியன், வியாழக்கிழமை

பிறப்பித்தாா். அதன் விவரம்:-

கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளா்களின் ஓய்வு பெறும் வயதினை 58-லிருந்து 59 ஆக உயா்த்த ஏற்கெனவே கடந்த ஆண்டு மே மாதம் அறிவுரைகள் அளிக்கப்பட்டன. இப்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளா்களின் ஓய்வு பெறும் வயதினை 59-லிருந்து 60 ஆக உயா்த்தி கடந்த பிப்ரவரியில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே, அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்களின் ஓய்வு பெறும் வயதினை

59-லிருந்து 60 -ஆக உயா்த்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து மாவட்ட கூட்டுறவு அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று தனது உத்தரவில் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT