தமிழ்நாடு

கரோனா நிதிக்கு திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் ஒரு மாத ஊதியத்தை அளிப்பர்: மு.க.ஸ்டாலின்

14th May 2021 10:53 AM

ADVERTISEMENT

 

கரோனா நிவாரண நிதியாக திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை அளிப்பார்கள் என முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பாதிப்பால் நிதி நெருக்கடி, மருத்துவ நெருக்கடியை எதிர்கொள்ள பொதுமக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 

கரோனா நிவாரண நிதிக்கு திமுகவினர் அனைவரும் தங்களால் முடிந்த நிதி அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். 

ADVERTISEMENT

இந்நிலையில், திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிப்பார்கள் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது. மு.க.ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ரூ. 25 லட்சம் கரோனா நிவாரண நிதிக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது. 

Tags : திமுக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT