தமிழ்நாடு

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை: மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி

DIN


சேலம்: கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
முதல்வரின் உத்தரவின் பேரில், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பான அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
தமிழக மின்வாரிய ஊழியர்கள் 24 மணி நேரமும் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மின்வெட்டு ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பணியாற்றி வரும் மின் ஊழியர்களை, முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று இக்கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும். 
தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிக்க குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும். 
சேலம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 5,000 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் சராசரியாக 600 பேர் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவருகிறது. அவர்களுக்கான படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி தேவை அதிகமாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
எந்த இடத்திலும் உயிரிழப்பு ஏற்பட்டு விடாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்கப்படும். தேவையான கூடுதல் ஆக்சிஜன் வசதியை உருவாக்குவதற்காக சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் தலா ஒரு மாடுலர் ஆக்சிஜன் அமைப்பை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் ஒவ்வொரு இடத்திலும் 40 படுக்கைகளுக்கு குறைந்த அளவிலான ஆக்சிஜன் வசதியை உருவாக்க முடியும்  என்றார்.
இரும்பாலை சிகிச்சை மையத்தில் ஆய்வு: இதையடுத்து, சேலம் இரும்பாலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார். 
பின்னர் அவர் கூறுகையில், அடுத்து 10 நாள்களுக்குள் சேலம் இரும்பாலை தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணிகள் நிறைவடையும். இதற்கென 1,200 கிலோ வாட் மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
அனைத்துத் துறையினர் ஒருங்கிணைத்து சிகிச்சை மையம் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும். இதன்மூலம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் தேவை பூர்த்தியடையும். தேவை ஏற்பட்டால் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT