தமிழ்நாடு

திருவள்ளூர் அருகே கோயிலில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

13th May 2021 12:00 PM

ADVERTISEMENT

 

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கோயிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே உள்ளது கீழச்சேரி. இங்குள்ள சாமாத்தம்மன் கோயிலில் பூசை செய்வதற்காக பூசாரி சென்றாராம். அப்போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதையடுத்து கோயில் உள்ளே சென்று பார்க்கையில் அம்மன் கழுத்தில் கிடந்த 2 கிராம் தாலி தங்கம், உண்டியல் பணம் ரூ.8 ஆயிரம் ரொக்கம் மற்றும் பூசை பொருள்கள் ஆகியவைகளை புதன்கிழமை நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடி சென்றதும் தெரியவந்தது. 

ADVERTISEMENT

இது குறித்து தகவலறிந்த மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT