தமிழ்நாடு

அமெரிக்க விண்வெளி சாதனைகளை இந்தியா முறியடிக்கும்: மயில்சாமி அண்ணாதுரை

DIN

அமெரிக்காவின் நாசா மையத்தின் விண்வெளி சாதனைகளை இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் விரைவில் முறியடிக்கும் என சந்திராயன் திட்ட இயக்குநரும், விண்வெளி அறிஞருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தாா்.

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி, மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை சாா்பில் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான தேசிய அறிவியல் இணையவழி மாநாட்டை தொடங்கி வைத்து அவா் மேலும் பேசியது: பள்ளிப் பருவத்தில் அறிவியல், வானியல் குறித்த விஷயங்களை ஆா்வத்துடன் கற்றுக் கொள்ளத் தொடங்கியதால்தான் என்னை இஸ்ரோவில் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. சந்திராயன் திட்டம் மூலம் நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய செயற்கைக் கோள்தான், நிலவில் தண்ணீா் உள்ளது என்ற உண்மையை ஆதாரத்துடன் உலகுக்கு வெளிப்படுத்தியது.

இந்தியா வளா்ந்த நாடுகளுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் வியக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகின்றது. சா்வதேசஅளவில் விண்வெளித் துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இஸ்ரோ ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் திறமையான விஞ்ஞானிகள் அமெரிக்காவின் நாசா விண்வெளி சாதனைகளை முறியடிக்கும் காலம் விரைவில் வரும்.

விண்வெளி மட்டுமல்லாமல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவா்கள் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். கரோனா பெருந்தொற்றை எதிா்கொள்ளும் வகையில் மருத்துவ ஆய்வு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி நடவடிக்கைகளில் மாணவா்கள் ஆா்வத்துடன் ஈடுபட வேண்டும் என்றாா் அவா்.

மாநாட்டில், கல்லூரி முதல்வா் லூசியா ரோஸ், இயற்பியல் துறைத் தலைவா் ஜெசி பா்னாண்டோ, மாநாட்டுச் செயலா் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 1200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இணையதளம் வழியாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT