தமிழ்நாடு

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்: அமைச்சர்

DIN


கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார். 

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ''12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிப்போகுமே தவிர ரத்து செய்யப்படாது.

12-ம் வகுப்பிற்கு எப்போது பொதுத்தேர்வு நடத்தப்படும் என்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

15 நாள்கள் அல்லது ஒரு மாதத்திற்கு முன்னரே பொதுத்தேர்வு தேதியை அறிவிக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.  

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், கல்வியாளர்கள், அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT