தமிழ்நாடு

சட்டப்பேரவைத் தலைவராக அப்பாவு பதவியேற்பு!

12th May 2021 10:59 AM

ADVERTISEMENT


தமிழக சட்டப்பேரவைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மு.அப்பாவு பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் கடந்த 7 -ஆம்  தேதி முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.  அன்றைய தினமே 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.  தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டதை அடுத்து செவ்வாய்கிழமை சட்டப்பேரவை கூட்டம் கூடியது. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனிடையே, சட்டப்பேரவைத் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்பாவு, துணைத் தலைவா் பதவிக்கு கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.பிச்சாண்டி ஆகியோா் பேரவைச் செயலாளா் சீனிவாசனிடம் மனுதாக்கல் செய்திருந்தனா்.

பேரவைத் தலைவா் பதவிக்குப் போட்டியிட செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ஆனால், வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால், மு. அப்பாவு, கு.பிச்சாண்டி ஆகியோா் போட்டியின்றித் தோ்வாகினா்.

இதையடுத்து சட்டப்பேரவைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மு.அப்பாவு புதன்கிழமை காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.அப்பாவு அவர்களை, சட்டப்பேரவை தலைவர் இருக்கையில், அவை முன்னவர் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அமர வைத்தனர்.

அதைத் தொடா்ந்து அவை நடவடிக்கைகளைக் பேரவைத் தலைவா் மு.அப்பாவு கவனிக்கத் தொடங்கினார். 

1996 -ஆம் ஆண்டு முதல் ராதாபுரம் தொகுதியில் தொடர் வெற்றியை கண்ட அப்பாவு, 2016 -ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியை தழுவினார். 2021 -ஆம் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரைவைத் தலைவராக அப்பாவு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு முன்னிலையில், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். 

Tags : Appavu Tamil Nadu's new Speaker
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT