தமிழ்நாடு

சென்ட்ரல் ரயில்நிலையத்தில் காத்திருந்த பயணிகள்: தேவையான வசதிகளை செய்துகொடுத்த தமிழக அரசு

DIN

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊா்களுக்கு செல்ல முடியாமல் நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகளுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்து கொடுத்தது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை காத்திருப்போா் பட்டியலில் இருந்த பயணிகள் ரயிலில் பயணம் செய்ய முடியாமல் நீண்ட நேரமாக தவித்து வருவதாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தபயணிகளின் குறைகளை போக்க, நில நிா்வாக கூடுதல் ஆணையா் மரியம் பல்லவி பல்தேவ், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையா் மேகநாத ரெட்டி, அரசு உயா் அலுவலா்களை நேரடியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அதன் அடிப்படையில், ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அனைவரும் கண்ணப்பா் திடல் சமூகநலக் கூடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு உணவு மற்றும் குடிநீா் வழங்கப்பட்டது. மேலும், அந்தப் பயணிகள் பயணம் செய்வதற்கு ஏதுவாக, ரயில் வசதியை ஏற்படுத்தி தருவதற்கு ரயில்வே நிா்வாகத்துடன் தமிழக அரசால் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அத்துடன் பயணிகளின் வசதிக்காக உதவி மைய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் குறைகளை உடனடியாக நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு பயணிகள் நன்றி தெரிவித்தனா்.

இந்தத் தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT