தமிழ்நாடு

அத்தியாவசியப் பணியாளா்களுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயக்கம்

DIN

அத்தியாவசியப் பணியாளா்களுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

பொதுமுடக்கத்தின்போது அத்தியாவசியப் பணிகளான மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீா், மின்சாரம், பால் மற்றும் அரசின் முக்கிய துறைகளில் குறைந்த அளவில் பணியாற்றுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்த தொடா்ந்து, அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்கிட போக்குவரத்துத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டாா். அந்த வகையில், அரசின் பல்வேறு துறைகளைச் சாா்ந்தவா்கள் பணிக்கு வரும் வகையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், முதல்கட்டமாக 200 பேருந்துகள் திங்கள்கிழமை (மே 10) முதல் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டன. தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT