தமிழ்நாடு

சீர்காழியில் காற்றில் பறந்த ஊரடங்கு: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

DIN

தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் சூழ்நிலையில் முழு ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்துள்ளது. 

நேற்றிலிருந்து வருகிற 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகளை மதிக்காமல் சீர்காழி நகர்ப் பகுதியில் இயல்பான நிலை காணப்படுகிறது. பொதுப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தும் அதிகளவு இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டுப்பாடுகளை மதிக்காமல் சீர்காழி நகர்ப்பகுதியில் வலம் வருகின்றனர். 

இதனால் கூட்டம் நிறைந்த சீர்காழி நகர்ப் பகுதியாகவே காட்சி அளிக்கிறது. உடனடியாக காவல்துறையினர் அத்தியாவசிய பணிகளுக்குச் செல்வோரைத் தவிர  மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT