தமிழ்நாடு

‘ஜனநாயகம் இல்லை’: மக்கள்நீதி மய்யத்திலிருந்து விலகிய மகேந்திரன்

6th May 2021 09:01 PM

ADVERTISEMENT

மக்கள்நீதி மய்யம் கட்சியில் ஜனநாயகம் இல்லை என அக்கட்சியில் இருந்து விலகிய துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட மக்கள்நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்தது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் வெற்றியை பறிகொடுத்தார். 

இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக முக்கிய நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

தேர்தல் தோல்வி குறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியில் துணைத் தலைவராக பொறுப்பு வகித்துவந்த மகேந்திரன் அறிவித்துள்ளார். 

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கட்சியில் குறிப்பிட்ட சிலரின் ஆலோசனைப்படி கமல் செயல்பட்டு வருகிறார். இதனால் கட்சியில் ஜனநாயகம் இல்லை. தேர்தலுக்கு பிறகு அவரது அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் என காத்திருந்த நிலையில் அந்த நம்பிக்கை தற்போது இல்லை என்பதால் கட்சியிலிருந்து விலகுகிறேன்” எனத் தெரிவித்தார். 

 

தொடர்ந்து, இந்தத் தேர்தலில் ஏமாற்றமடைந்ததைப் போல் இனிவரும் தேர்தல்களில் ஏமாறாமல் இருக்க வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்த மகேந்திரன் கட்சியில் இருந்து விலகினாலும் ஒரு நண்பனாக கமல் அவர்களுக்கு ஆதரவாக உதவிகளை மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார்.

மேலும் கட்சியை புனரமைக்க துணைத் தலைவர் பொன்ராஜ், பொதுச்செயலாளர்கள் சந்தோஷ்பாபு, சி.கே. குமரவேல், முருகானந்தம், மவுரியா, நிர்வாகக்குழு உறுப்பினர் உமாதேவி ஆகியோர் பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT