தமிழ்நாடு

திருக்கழுக்குன்றத்தில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

DIN

தமிழகச் சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மராட்டியம், பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து துணை இராணுவத்தினர் (பி.எஸ்.எப்) 300 பேர் மாமல்லபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ளனர். 

அவர்கள் சதுரங்கப்பட்டினம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் திருப்போரூர், கோவலம், கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, நெம்மேலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்நிலையில் திருக்கழுக்குன்றத்தில் புதன் கிழமை கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 

திரிபுரா 80 பட்டாலியன் படைப் பிரிவைச் சேர்ந்த துணை இராணுவத்தினர் (பி.எஸ்.எப் - எல்லை பாதுகாப்புப் படை) 82 பேர் அதன் உதவி கமாண்டர் அனுபவ் அத்ரியா தலைமையில் திருக்கழுக்குன்றம் காவல் நிலைய காவலர்கள் பேண்டு வாத்தியத்துடன் முன்செல்ல துணை இராணுவத்தினர் மிடுக்குடன் கொடி அணிவகுப்பு நடத்தினர்.  

திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு மேட்டுத் தெரு, கருங்குழி சாலை, பெரிய தெரு, கம்மாளர் தெரு, அடிவார வீதி, என முக்கிய தெருக்கள் வழியாக நடைபெற்ற கொடி அணிவகுப்பு மாமல்லபுரம் சாலை வழியாக வந்து திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் முடிவடைந்தது. இந்த கொடி அணி வகுப்பால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டு வேடிக்கை பார்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT