தமிழ்நாடு

திருமணத்தை மீறிய உறவு: மானாமதுரை அருகே இளம்பெண் வெட்டிக் கொலை

8th Mar 2021 09:46 AM

ADVERTISEMENT

 

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிளங்காட்டூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வளர்மதி(22) என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிளங்காட்டூரைச் சேர்ந்தவர் வளர்மதி(22) இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் மணிச்சியேந்தலைச் சேர்ந்த சத்தியேந்திரன் (28)க்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமாகி ஆகாஷ், நிவேதா என இரு குழந்தைகள் உள்ளனர். 

கணவர் சத்தியேந்திரன் வெளிநாடு சென்று விட்டார். இந்நிலையில் வேல்ராஜ் என்பவருடன் வளர்மதிக்கு தொடர்பு ஏற்பட்டு கடந்த 4 ம் தேதி இருவரும் திருச்சி சென்று தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர். தகவல் அறிந்து  பெண்ணின சகோதரர் மணி, உறவினர்கள் தனசேகரன், காட்டுராஜா ஆகிய மூவரும் திருச்சி சென்று வேல்ராஜை சராமாரியாக தாக்கி வளர்மதியை கிளங்காட்டூருக்கு கூட்டி வந்தனர். 

இந்நிலையில் திருச்சியில் தாக்கப்பட்ட வேல்ராஜ் உயிரிழந்ததால் திருச்சி காவல்துறையினர் விசாரணைக்காக கிளங்காட்டூர் கிராமத்துக்குவந்து சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மணி, தனசேகரன், காட்டுராஜா ஆகிய மூவரும் வளர்மதியை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர். 

ADVERTISEMENT

இதில் தனசேகரன், காட்டுராஜா ஆகிய இருவரையும் காவலர்கள் கைது செய்தனர். தப்பியோடிய மணியை தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்ட காவல்துறை எஸ்.பி ராஜராஜன் சம்பவம் நடந்த கிராமத்துக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார்.
 

Tags : Manamadurai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT