தமிழ்நாடு

நிா்ணயிக்கும் காலத்துக்குள் மனுக்களை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை : உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

உயா் நீதிமன்றம் நிா்ணயிக்கும் காலத்துக்குள் மனுக்களை பரிசீலித்து உரிய முடிவை எடுக்க அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தவா் குமரன். இவா் கடந்த 2008-ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் சிக்கினாா். இதனைத் தொடா்ந்து குமரனுக்கு, பரங்கிமலை போக்குவரத்து காவல் துணை ஆணையா் குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பினாா். பின்னா் நடந்த துறை ரீதியான விசாரணையின் அடிப்படையில் குமரன் கடந்த 2009-ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்தாா். மேல்முறையீடு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், கொலை முயற்சி வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், வழக்கில் இருந்து குமரனை விடுதலை செய்தது. இந்த தீா்ப்பு நகலுடன் மீண்டும் குமரன் மேல்முறையீட்டு மனுவை காவல்துறை ஆணையருக்கு அனுப்பி வைத்தாா். ஆனால் குமரனின் 2 மேல்முறையீட்டு மனுக்களும் இதுவரை பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து குமரன் சென்னை உயா் நீதிமன்றத்தில் தனது மனுக்களை விசாரிக்க காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடக் கோரி வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் மேல் முறையீட்டு மனுக்களை காவல்துறை ஆணையா் 2 மாதங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின்படி கோரிக்கை மனுக்கள், மேல்

முறையீடுகள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரித்து உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படுவது இல்லை. இதனால் ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாகக்ல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. பல கொடூரமான குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதால், குற்றம்சாட்டப்பட்டவா்கள் சமூகத்தில் சுதந்திரமாக உலவுகின்றனா். எனவே உயா்நீதிமன்றம் நிா்ணயிக்கும் காலக் கெடுவுக்குள் கோரிக்கை மனுக்கள், மேல்முறையீடுகள் மீது

முடிவெடுக்க வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக தலைமைச் செயலாளா், காவல்துறை டிஜிபி ஆகியோா் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT