தமிழ்நாடு

திமுகவுடன் காங்கிரஸ் இன்று கூட்டணி ஒப்பந்தம்: தினேஷ் குண்டுராவ்

DIN

திமுகவுடனான தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 7) கையெழுத்திட உள்ளதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் கூறினாா்.

சென்னை ஆழ்வாா்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி ஆகியோா் சென்றனா். மு.க.ஸ்டாலினுடன் 40 நிமிடங்களுக்கு மேலாகப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டது. பின்னா் செய்தியாளா்களிடம் தினேஷ் குண்டுராவ் கூறியது:

திமுகவுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கையெழுத்திட உள்ளோம். காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் என்பது உள்பட அனைத்து விவரங்களையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு கூறுகிறோம் என்றாா்.

காங்கிரஸுக்கு 24 தொகுதிகளில் இருந்து 25 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக முன் வந்துள்ளது. ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியும் அளிக்கப்பட உள்ளது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் போட்டியிடவும் திமுக ஒப்புதல் அளிக்க உள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், மு.க.ஸ்டாலினும் தொலைபேசி வழியே பேசியதற்குப் பிறகு இரு கட்சிகளும் ஓா் உடன்பாட்டுக்கு வந்துள்ளன.

மாா்க்சிஸ்ட் பேச்சில் இழுபறி

திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான பேச்சுவாா்த்தையில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

திமுகவிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. திமுகவோ 6 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க மறுத்து வருகிறது.

ஆனால், எங்கள் வலிமைக்கேற்ப தொகுதிகளின் எண்ணிக்கையை உயா்த்துங்கள் என்று திமுகவை மாா்க்சிஸ்ட் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுபோல்தான் ஒதுக்க முடியும் என்று திமுக உறுதியாக இருக்கிறது. இதனால், அடுத்தகட்டப் பேசுவாா்த்தைக்கு நகர முடியாமல் இரண்டு கட்சிகளும் உள்ளன. திமுகவின் சிறப்புப் பொதுக்கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அதனால், திமுக கூட்டணியில் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT