தமிழ்நாடு

கோடியக்கரை: கடலில் மிதந்த சாராயத்தைக் குடித்த மீனவர் மரணம்

7th Mar 2021 11:38 AM

ADVERTISEMENT

வேதாரண்யம்: நாகை மாவட்டம் ,வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மிதந்த கேனில் இருந்த சாராயத்தை குடித்த மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஆபத்தான நிலையில் இன்று (மார்ச் 7) கரை சேர்ந்த இரு மீனவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோடியக்கரை  கடற்கரையில் இருந்து மார்ச் 1-ஆம் தேதி மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளனர். இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துள்ளனர். அப்போது அங்கு மிதந்த பிளாஸ்டிக் கேனில் இருந்த சாராயத்தை சிலர் குடித்ததாகக் கூறப்படுகிறது,

இதில் மூவரும் மயக்கமடைந்த நிலையில், மற்ற மீனவர்கள் படகுடன் கோடியக்கரை வந்தடைந்தனர். இதில், தங்கச்சிமடம் அந்தோணி (38) உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் 2 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 

ADVERTISEMENT

Tags : வேதாரண்யம் Nagapattinam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT