தமிழ்நாடு

தேமுதிகவுடன் இன்று மாலை மீண்டும் பேச்சு: ஓ.பன்னீர்செல்வம்

6th Mar 2021 02:15 PM

ADVERTISEMENT

தொகுதிப் பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் இன்று (மார்ச் 6) மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக சிக்கல் நீடித்து வரும் நிலையில், இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

தேமுதிகவுடன் ஏற்கெனவே மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 25 தொகுதிகள் கேட்ட நிலையில், அதிமுக 15 தொகுதிகள் மற்றும் ஒரு எம்.பி. தொகுதியை ஒதுக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

Tags : அதிமுக தேமுதிக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT